Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இணைபிரியாத தம்பதிகள்…. இறப்பிலும் ஒன்றாக சேர்ந்த உறவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எழுவாம்பாடி கிராமத்தில் விவசாயியான மா.சுப்பிரமணியன் – லட்சுமி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 8-ஆம் தேதியன்று தீவிரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் மா.சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதாவது மனைவியின் இழப்பின் துயரம் தாளாமல் கணவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |