மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாகல்பட்டி பிரிவு சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில்களை கூறினர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், சந்துரு என்பதும், இவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 450 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி இவர்களுக்கு கஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.