காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி என்று புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தேன். அப்போது அவர் புதுச்சேரிக்கு பரப்புரைக்கு வருவதாக கூறியுள்ளார்.
மேலும் ராகுல் காந்திக்கு புதுச்சேரியின் மீது ஒரு தனிப் பற்று உள்ளது. பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி. ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத் திட்டங்களை தடுத்து நிறுத்துவது குறித்து கேள்வி கேட்காமல் காங்கிஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் எரிக்கின்றனர். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.
பொது மக்கள் அனைவரும் பாஜகவை முற்றிலும் புறக்கணிப்பார்கள். பாஜக ஒரு மதவாத கட்சி. அந்த கட்சியை நாங்கள் புதுச்சேரியிலிருந்து விரட்டி அடிப்போம். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் எல்லாம் இறுதியில் காணாமல் போய்விடும். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்”என்று கூறியுள்ளார்.