ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது.
காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கிருஷ்னகர்த்தி பகுதியில் இராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.