சீன நாட்டிலிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறி நடந்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்த நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதம் செய்யப்பட்டதாக இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்று வெளியானது. அதில், கொரோனா தொற்று விவகாரத்தில் இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் சீனா மீது கோபத்தில் உள்ளது. அதோடு அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் பாகிஸ்தான் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை போட்டது. அதற்கு காரணம் சீனாவுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நட்பு என்று அறியப்படுகின்றது. அதோடு சீனா பாகிஸ்தான் இடையே இருக்கும் பொருளாதார பாதை திட்டத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துவது சீனா. இதனால் பாகிஸ்தானுக்கு வேலையில்லாமல் சீனாவில் இருந்து ஆட்களை கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. இது பலுசிஸ்தான் மாகாண மக்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது. அதோடு சீனாவில் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரை அந்நாடு மதரீதியாக அடக்குமுறை செய்வதும் பாகிஸ்தான் மக்களிடையே கேள்விகளை எழுப்பி வருகின்றது.
இந்தியாவில் இருக்கும் பூடான் இடையே சில பகுதிகளை சீனா உரிமை கோரும்போது பாகிஸ்தானிடமும் நாளை இதே வேலையை காட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சீனாவுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் சீனாவை உலகநாடுகள் தனிமைப்படுத்தும் போது பாகிஸ்தானையும் தனிமைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தரப்பில் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.