பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரர்கள் 10 பேர் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வருகின்ற 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட்க்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருநார்த்தே, மலிங்கா உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ள உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்ற போது வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்பு மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே அணிகள் தவிர வேறு எந்த நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.