24 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4-ம் தேதி தொடங்க உள்ளது.இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணி 24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்றடைந்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.இதையடுத்து 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை வீர்கள் ஜெயவர்தனே,சங்கக்காரா காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.