Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : முதல் டெஸ்ட் தொடருக்கான …..பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது.

இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இத்தொடரில்  ஹசன் அலி, அப்துல்லா ஷஃபீக் மற்றும் நௌமன் அலி  ஆகியோர் இடம்பெற்றுள்ளன. அதேசமயம் சோயிப் மாலிக்கிற்கு இப்போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபீக், அபித் அலி, அசார் அலி, ஃபஹீம் அஷ்ரப், ஃபவாத் ஆலம், ஹசன் அலி, இமாம் உல் ஹக், நௌமன் அலி, சஜித் கான், ஷஹீன் ஷா அஃப்ரிடி.

Categories

Tech |