Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு ….! பாகிஸ்தான் 161 ரன்கள் குவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்துள்ளது.

பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலி -அப்துல்லா ஷபீக் ஜோடி களமிறங்கினர். இதில் அபித் அலி 39 ரன்னும் , அப்துல்லா ஷபீக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம்,  அசார் அலியுடன் ஜோடி சேர்ந்தார்.இதில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் பாபர் அசாம் அரை சதம் அடித்தார்.அப்போது 57 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது .இதனால் முதல் நாள்  ஆட்டம் முடிவுக்கு வந்தது.இதில் அசார் அலி 36 ரன்னுடனும் ,  பாபர் அசாம் 60 ரன்னுடனும்   ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Categories

Tech |