வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 217 ரன்கள் குவித்துள்ளது .
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 70.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பஹாத் ஆலம் 56 ரன்களும், பஹீம் அஷ்ரப் 44 ரன்களும் , பாபர் அசாம் 30 ரன்களும் எடுத்தனர். இதன் பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் எடுத்துள்ளது.