Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS WI T20 :பாபர் அசாம் , ரிஸ்வான் அதிரடி ஆட்டம் ….! வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .

பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் 64 ரன்னும், ஷமர் புரூக்ஸ் 49 ரன்னும்  குவித்தனர் .

இதன் பிறகு 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் கேப்டன் பாபர் அசாம் 79 ரன்னும், முகமது ரிஸ்வான் 87 ரன்னும்  அடித்து விளாசினர். இறுதியாக பாகிஸ்தான் அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது.

Categories

Tech |