பகலில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாயப்பன் நகரில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரன் மற்றும் கலைச்செல்வன் என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் திருமணத்தை பதிவு செய்ய தங்களது சொகுசு காரில் சென்று திருமண பதிவுச் சான்று பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து காரை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் வெளியே வந்து பார்த்த போது கார் காணவில்லை. இது பற்றி காவல்நிலையத்தில் பவித்ரன் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.