கேரளா மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவில் பகவல் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் லைலா. பகவல் சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக அறியப்படுகிறார். கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பகவத்சிங் மற்றும் லைலா தம்பதி பில்லி சூனியம் செய்து இரண்டு பெண்களின் நரபலி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இது குறித்து அவர்களின் பக்கத்து வீட்டார்கள் கூறியது, மனிதன் நரபலி கொடுத்த செய்தியை தொலைக்காட்சி மூலமாக தான் அறிந்து கொண்டோம். நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் அவர்களைப் பற்றி மோசமாக சொல்ல ஒரு விஷயம் கூட இல்லை. சமீபத்தில் கூட பல நிகழ்ச்சியில் அவர்களை பார்த்தோம். அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை வழக்கம் போல தான் இருந்தார்கள். இது தகவல் அறிந்த பிறகு எங்களால் சாப்பிடவோ, உறங்கவோ முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீள முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து மாநில காவல் துறை ஐஜி பி.பிரகாஷ் கூறியது, சாலைகளில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த பத்தினம்திட்டா மாவட்டம் கதவன்தாரா மற்றும் காலடி பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடந்த ஜூன் மாதத்திலும் செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அவர்களின் உடல் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு திருவல்லாவில் ஏழந்தூர் கிராமத்தில் இரண்டு இடங்களில் புதைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லாவை சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பகவல் சிங், அவருடைய மனைவி லால் மற்றும் பெரும்பூவுரை சேர்ந்த முகம்மது சஃபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணை செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக இரு பெண்களை திருவல்லாவில் தம்பதியின் வீட்டில் வைத்து கொலை செய்து எழுந்தூர் கிராமத்தில் புதைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட பெண்களை இந்த கிராமத்துக்கு எப்படி அழைத்து வந்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.