ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிசந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தி மண்டல டி.எம்.பி.கண்டிகையில் இருந்து வேடாம் கிராமத்துக்கு வேலை தேடி வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த முனிராதா என்பவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் தேவான்ஸ் சென்ற மகன் உள்ளார். இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவெட்டர் கலப்பையை இணைந்து உழவு பணியில் ஈடுபட்டார்.
முனிசந்திரா தனது ஒரே மகன் தேவான்சை தூக்கிக்கொண்டு மகேசின் நிலத்துக்கு சென்றார். அங்கு தேவான்ஸ் அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த மகேஷ் சிறுவனை தூக்கி டிராக்டரில் உட்கார வைத்துக் கொண்டார். சிறுவன் டிராக்டரில் அமர்ந்திருப்பதை மறந்த மகேஷ் வேகமாக ஓட்டினார். ஓடும் டிராக்டரில் இருந்து சிறுவன் திடீரென தவறி கீழே சேற்றில் விழுந்தான். அப்போது சூழலும் ரொட்டோவெட்டர் கலப்பை சிக்கிய தேவான்ஸ் மூன்று துண்டுகளாக சிதறி பலியானான். இது குறித்து தகவல் அறிந்தது ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.