Categories
தேசிய செய்திகள்

பகீர்!….கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள்… பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு….!!!!

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் வீட்டு வசதி சங்கத்தின் கழிவு நீர் அறையை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 3 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 18 அடி ஆழமுள்ள வடிகால் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டியில் இறங்கி வேலை செய்து வந்தனர். அந்த தொழிலாளர்கள் வேலை செய்யும் போது இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காணாமல் போனார். இதனையடுத்து வீட்டு வசதி சங்கத்தில் வசிப்பவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையில், மூச்சு திணறல் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காலை 7 மணிக்கு தகவல் கிடைத்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். வீட்டு வசதி சங்கத்தில் வசிப்பவர்கள் வெளியை மொத்த மூன்று ஜோடி காலணிகளை பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் மூன்றாவது நபர் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி இருக்கலாம் என்று மூன்றாவது தொழிலாளியை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளை கைமுறையாக சுத்தம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

Categories

Tech |