Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவனை கொன்று புதைத்த மனைவி…. போலீஸ் கைவிட்ட வழக்கில் திடீர் திருப்பம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் சந்திரவீர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக இவரது மனைவி சவிதா புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துப்பு எதுவும் கிடைக்காமல் கிடைப்பிலேயே இருந்த இந்த வழக்கில் அதிரடி திருப்புமாக மனைவியே கணவனை கொலை செய்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இது குறித்து காஜியாபாத் எஸ்பி தீக்ஷா சர்மா கூறியது, சவிதாவும் அவரது காதலரான பக்கத்து வீட்டுக்காரர் அருண் ஆகிய இருவரும் சேர்ந்து சந்திர வீரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

அதன்பிறகு அருண் வீட்டில் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த ஏழு அடி பள்ளத்தில் சந்திரவீர் உடலை போட்டு மூட் மேற்பரப்பில் சிமெண்ட் வைத்து பூசி விட்டனர். சவிதா தன் கணவரை சகோதரர் கடத்திவிட்டதாக போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் மிகத் திறமையாக விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டனர். மேலும் சந்திர வீரின் சிதைந்த உடல் மீட்கப்பட்டு, கொலைக்கு பயன்படுத்தி துப்பாக்கி மற்றும் கோடாரி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |