உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் காலை 11.40 மணிக்கு கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் கேதார்நாத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் கூறியது, ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் இந்திய-தீபக் எல்லை பகுதியான கருட் சட்டி என்ற பகுதிக்கு நுழைந்த போது திடீரென விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானி, ஆறு யாத்ரீகள் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயர்ந்தவர்களின் 3 பேர் தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பிரேம் குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேர் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.