உத்திரபிரதேச மாநில அலிகாரியில் ஒரு நபர் காலை வேளையில் காட்டு பகுதியில் காலை கடன் கழிப்பதற்காக சென்று உள்ளார். அவர் திரும்பி வரும்போது அங்கிருந்து ஒரு தோட்டத்தில் விளைந்திருந்த சில கொய்யா பழங்களை பறித்துள்ளார். இதனை அங்கிருந்து இருவர் பார்த்து உள்ளனர். உடனே அந்த நபரை பிடித்து கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் அந்த நபர் சுயநினைவிழந்தார். அதன் பிறகு அவரை அங்கே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பலத்த காயம் காரணமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் கொடுத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அலிகார் கிராமத்தில் சண்டை நடந்ததாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு ஒரு போலீஸ் குழு விரைந்தது. அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.