Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. சட்டப்பேரவை துணை சபாநாயகர் திடீர் மரணம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி பணியாற்றி வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்ட பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  இதனையடுத்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோ சின்ஹா திடீர் மரணத்திற்கு அம்மா மாநில முதல்வர் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |