எஸ்பிஐ வங்கிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, தனக்கு ரூ.10 லட்சம் கடன் தராவிட்டால் வங்கி மேலாளரை கடத்தி கொலை செய்து விடுவதாகவும், வங்கியை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவதாகும் மிரட்டி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் தொலைபேசியில் அழைத்த அந்த மர்ம நபர் மேற்கு வங்கத்தில் இருந்து அழைத்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மும்பை காவலர்கள் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர். மேலும் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பாரத ஸ்டேட் பாங்க் திகழ்கிறது. வங்கிக்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.