Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ….. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ….!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 ,614 ரன்கள் எடுத்துள்ளார் .அதோடு 134 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். அதேபோல் 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2440ரன்களும், 61 விக்கெட்டும்  கைப்பற்றியுள்ளார் .

மேலும் 55 டெஸ்ட் போட்டிகளில் 3,652 ரன்களும் 53 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில்  முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். . அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற போதும் உள்நாட்டு தொடரில் அவர் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |