Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்தத்தையும்  மீறி… இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு!

காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச எல்லைப் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் கதுவா மாவட்டம் பூஞ்ச் பகுதி வழியாக செல்கின்றது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் படைகள்  சிறிய ரக துப்பாக்கியால் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள், “பூஞ்ச் பகுதியில் உள்ள மெந்தார் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதில் தாக்குதலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்தினர்” என தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே  இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும்  மீறி கடந்தாண்டில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளது நினைவுக் கூரத்தக்கது.

Categories

Tech |