Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்…. திருப்பி அடித்த இந்தியா.!!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி  தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. 

இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையில்   முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Image result for Poonch Indian Army retaliates

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினரும் திருப்பி பதிலடி தாக்குதல் நடத்தினர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 A நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் இருந்தே எல்லையில் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |