பாகிஸ்தான் நாட்டின் வம்சாவளியினரான ஒரு தொழிலதிபர் உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினரான முகமது சஹூர்
என்ற தொழிலதிபர் உக்ரைன் நாட்டில் வசித்திருக்கிறார். எனவே, உக்ரைனில் நடந்த போரில் மாட்டிக்கொண்ட பல மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார்.
இந்நிலையில் உக்ரைன் நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள முகமது சஹூர் தன் நண்பர்கள் உதவியோடு அந்நாட்டிற்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்திருப்பதாக உக்ரைன் நாட்டின் பாடகியான அவரின் மனைவி கமாலியா சஹூர் தெரிவித்திருக்கிறார்.