பாகிஸ்தானில் சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது இருந்த குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவெட்டா நகரில் கிழக்கு பைபாஸ் சாலையில் மருந்து கடை ஒன்று இயங்கி வருகின்றது. சம்பவத்தன்று இந்த கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்களை தாக்க வேண்டுமென்று வெடிக்கச் செய்த இந்த குண்டு வெடிப்பால் 25 பேர் காயமடைந்து, 2 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை . இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அரசு சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.