பாகிஸ்தானில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த வருடத்தில் தற்போது வரை இல்லாத அளவிற்கு மிக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு கூறியுள்ளதாவது, கடந்த ஒரே நாளில் 1043 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இது தான் இந்த வருடத்தில் பதிவான குறைந்த பட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 39 நபர்கள் தற்போதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,913 ஆக அதிகரித்திருக்கிறது. தற்போது பாகிஸ்தானில் பாதிப்பு 1.9 % குறைந்திருக்கிறது.