Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகும் …. முன்னாள் கேப்டனின் மகன்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மகனான அசாம் கான் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சென்று , பாகிஸ்தான் அணி 3 ஒருநாள்  மற்றும் மூன்று டி 20  போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்து டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டி 20 அணியில் புதுமுக வீரரான அசாம் கான் (வயது 22) அணியின் இடம்பெற்றுள்ளார். புதுமுக வீரர் அசாம் கான்  பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் , கேப்டனுமான  மொயின் கானின் மகனாவார்.

இவர் உள்ளூர் மற்றும் டி 20  லீக் கிரிக்கெட்டில் 36 போட்டிகளில் விளையாடி அதிரடி காட்டியுள்ளார். அதோடு ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். போட்டியில் இவர் அடிக்கும் சிக்ஸர்  திறன் தான் அணியின் தேர்வாளர்களை  வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் ஓராண்டிற்கு முன்பு அணியில் இடம்பெறுவது குறித்து தேர்வுக்குழு யோசித்து வந்தது. ஆனால் அப்போது அவர் அதிக உடல் பருமனுடன் இருந்ததால், உடல் எடையை குறைத்தால் மட்டுமே அணிக்கு தேர்வாக முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் கடும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் குறைத்துள்ளார் .

Categories

Tech |