பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவராக ரமீஸ் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் 36-வது தலைவராக தெரிவாகியுள்ள ரமீஸ் ராஜா அடுத்த மூன்று வருடங்களுக்கு தலைவர் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த 1984 -1997 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள ரமீஸ் ராஜா இதுவரை 255 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 8474 ரன்கள் குவித்துள்ளார். இதன் பிறகு ஓய்வு பெற்ற அவர் 2000-2004 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டின் தலைமை செயல் நிர்வாகியாகவும் ,வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார் .