Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு கழுதைகளை வாரி வழங்கும் பாகிஸ்தான்.. வெளியான காரணம்..!!

பாகிஸ்தான், சீனாவிடம் பட்ட கடனை கழுதைகள் விற்பனை மூலமாக ஈடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே கழுதைகள் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. 2021 ஆம் வருடத்தில் பாகிஸ்தானில் 12 லட்சம் எருமைகளும், 3.5 கோடி ஆடுகளும் உள்ளது. செம்மறி ஆடுகளின் இனப்பெருக்க எண்ணிக்கையும் வருடத்திற்கு 4 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதேபோன்று, கழுதைகள் எண்ணிக்கை, கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சம் உயர்ந்துள்ளது. எனவே தற்போது மொத்தமாக நாட்டில் கழுதைகள் 56 லட்சம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கழுதைகள் இனப்பெருக்கத்தை சீனாவிற்காகத்தான் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. சீன நாட்டில் கழுதைகளுக்கு அதிக அளவில் மதிப்புள்ளது.

அதன் மூலமாக பல வியாதிகளுக்கு மருந்துகள் பெறப்படுகிறது. ஆண்மை அதிகரிப்பதற்கான கொழுப்பு சத்தும் எதிர்ப்பு சக்தியும் கழுதையிலிருந்து கிடைக்கிறது. எனவே பாகிஸ்தானிலிருந்து வருடத்திற்கு சுமார் 80 ஆயிரம் கழுதைகள் சீன நிறுவனங்களுக்கு  விற்பனையாகிறது.

இதில் பாகிஸ்தான் பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. அதாவது பாகிஸ்தான் சீனாவிடமிருந்து பல ஆயிரம் கோடி கடன் பெற்றதை கழுதைகள் மூலமாக ஈடுசெய்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கழுதைகள் இனப்பெருக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறார். கழுதைகளுக்கென்றே பிரத்யேக மருத்துவமனைகளும் பாகிஸ்தானில் செயல்படுகிறது.

Categories

Tech |