Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபருக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை..!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான ஆசிப் அலி சர்தாரி, உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான, 65 வயதுடைய, ஆசிப் அலி சர்தாரிக்கு, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த வருடத்திலிருந்தே, உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு அவரால் நீதிமன்றங்கள் சென்று வர முடியவில்லை. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரை சிகிச்சைக்காக 2019 வருடத்தில் டிசம்பர் மாதம் ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் தற்போதும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில், தொடர் சிகிச்சையில் உள்ளார்.

Categories

Tech |