Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் இந்த கூற்று உண்மையா..? அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாத இந்திய கடற்படை… வெளியான பரபரப்பு தகவல்..!!

கடந்த 16-ஆம் தேதி அன்று இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைவதை தங்கள் நாட்டு கடற்படை தடுத்து நிறுத்தியதாக நேற்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் நேற்று “கடந்த 16-ம் தேதி தங்கள் நாட்டு கடற்படை இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியதாக” கூறியுள்ளது. ஆனால் கடல்சார் செயல்பாடுகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள இடத்தில்தான் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் பாகிஸ்தானின் இந்த கூற்று நம்பமுடியாத தகவல் என்றும் கூறியுள்ளனர். அதேசமயம் பாகிஸ்தான் கடல் எல்லை அந்நாட்டின் கடல் பகுதியில் இருந்து 12 கடல் மைல் தூரம் வரை பரந்துள்ளது.

ஆனால் கராச்சி துறைமுகத்திலிருந்து 150 கடல் மைல் தூரத்தில் தான் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அப்பால் இந்திய நீர்மூழ்கி கப்பல் இருந்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கடல்சார் செயல்பாடுகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்திய கடற்படை பாகிஸ்தானின் இந்த கூற்று பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.

Categories

Tech |