Categories
தேசிய செய்திகள்

“எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு” தூங்கிய இளைஞருக்கு காயம்..!!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான்  இடையே எல்லை பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு  பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.

Image result for Pakistan falsely firing on Indian border
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இடையே  போகர்னி என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 18 வயதான முகமது ஈஷாக் என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர்  உடனடியாக அந்த இளைஞன்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  உடல்நலம் தேறி வருகிறார். எல்லையில் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே  சில மணிநேரமாக  துப்பாக்கி சூடு நடந்தது.

Categories

Tech |