Categories
உலக செய்திகள்

“தொலைக்காட்சிகளில் ஒழுக்கக்கேடான தொடர்களை ஒளிபரப்ப கூடாது!”.. பாகிஸ்தான் அரசு அறிவிப்பு..!!

பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்படும் தரம் குறைவான காட்சிகளுக்கு தடை அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், நாகரீகமற்ற உடை அணிவது, படுக்கையறை காட்சிகள் தொடர்பான உரையாடல்கள், சைகைகள் மற்றும் கட்டியணைப்பது ஆகிய காட்சிகளை  ஒளிபரப்பக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறது.

மேலும் கலாச்சாரத்தை அழிக்கும் வகையிலான காட்சிகளை தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, தொலைக்காட்சி தொடர்களில்,  ஒழுக்கக்கேடான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |