Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாகிஸ்தான் நபர் கைது..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாகிஸ்தான் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை இரும்பு வேலை பார்த்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதில் சமையலறை மட்டும் பொதுவான பகுதியாக இருந்துள்ளது. சம்பவத்தன்று 8 வயது சிறுமி உணவை எடுப்பதற்காக சமையலறைக்குள் சென்றிருக்கிறார். இதை பார்த்த குடிபோதையில் இருந்த வாலிபர் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமி, அவரின் தாயாரிடம் தெரிவித்தார்.
இது பற்றி சிறுமியின் பெற்றோர் முரகாபாத் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை கைது செய்து துபாய் கோர்ட்டில் ஒப்படைத்தனர். அதன்பின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நேற்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட பாகிஸ்தான் நபருக்கு 3 மாத ஜெயில் தண்டனையும், தண்டனை காலம் முடிந்ததும் அவரை நாடு விட்டு நாடு கடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |