Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு பால்… இந்தியாவுக்கு சுண்ணாம்பு – பாகிஸ்தானின் இரட்டை வேடம்!

பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் நாட்டுக்கு சீனா உதவி செய்திருப்பதால், இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அமைதி காத்துவருகிறது.

ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்தார். அப்போது, உய்குர் இஸ்லாமியர்களின் நிலை சீனாவில் மோசமாக இருந்தபோதும், அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு காரணம் என்ன? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு பதிலளித்த இம்ரான் கான், “இந்தியாவில் நடைபெறுவதற்கும் சீனாவில் நடைபெறுவதற்கும் வேறுபாடு உண்டு. சீனா தங்களுடைய நெருங்கிய நட்பு நாடு.

பொருளாதார நெருக்கடி போன்ற கடினமான சூழல்களில் சீனா தங்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், சீனாவுடன் இதுபோன்ற பிரச்னையை பொதுவெளியில் எழுப்ப மாட்டோம்” என்றார். சீனாவில் வாழும் சிறுபான்மையினர்களின் நிலை மோசமாக இருப்பதால், சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிறுபான்மையினர்கள் அதிகளவில் முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

Categories

Tech |