Categories
உலக செய்திகள்

உண்மைதான்… மலாலாவை சுட்ட பயங்கரவாதி தப்பி விட்டான்… ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!!

மலாலாவை சுட்ட தலிபான் பயங்கரவாதி சிறையிலிருந்து தப்பி சென்றது உண்மைதான் என்று பாகிஸ்தான் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.

பெண் கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல்வேறு பிரசாரங்களை செய்தவர் மலாலா. இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு பயங்கரவாதியான இசானுல்லா இசான் (Ehsanullah Ehsan) என்பவர் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் மலாலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு பின் குணமடைந்தார்.

Image result for Ehsanullah Ehsan malala

மலாலாவை சுட்ட இசான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால் அங்கிருந்து அவன் தப்பி தனது ட்விட்டரில் தகவல் வெளியிட்டான். இருந்த போதிலும் அவன் தப்பியதை பாகிஸ்தான் இதுவரையில் உறுதி செய்யாமலேயே இருந்தது. இந்நிலையில், இசான் தப்பியதாக வந்த செய்திகள் உண்மை தான் என்று பாக்., உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா ஒப்புக் கொண்டுள்ளார்.

Categories

Tech |