பாகிஸ்தான் AIP ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணியை சீனாவின் உதவியுடன் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் அரசு வருகின்ற 2028-ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை 3 பில்லியன் டாலர் மதிப்பில் சீனாவின் உதவியுடன் கட்ட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவின் வூகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், கராச்சியில் தற்போது மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணியை தொடங்கியுள்ளது. சுமார் 77.6 மீட்டர் நீளம் உடைய இந்த நீர்மூழ்கிக் கப்பலானது 3,600 டன்கள் எடை இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த நீர்மூழ்கி கப்பலால் பாபர் 3 என்ற அணு ஆயுதத்தையும், 6 டர்பிடோ ஏவுகணைகளையும் எடுத்துச் சொல்ல முடியும்.