பாகிஸ்தானில் மர்மநபர்களால் சூறையாடப்பட்ட பிள்ளையார் கோவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலை கடந்த 4 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் கோவிலுக்கு தீயும் வைத்தனர். இதனிடையே இந்தியா சார்பில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டும் காவல்துறையினர் இந்த சம்பவத்தை தடுக்க தவறிவிட்டதாக கண்டனத்தை தெரிவித்தது.
அதனை தொடர்ந்து கோவிலை சேதப்படுத்திய 150க்கும் மேற்பட்டோர் மீது பயங்கரவாத வழக்குகள் பதியப் பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாகாண அரசு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பிள்ளையார் கோவில் தற்போது சீரமைக்கப்பட்டு இந்து சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.