பாகிஸ்தானில் இருந்த இந்துக் கோவிலை சேதப்படுத்தியது இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான கோவில் சேதப்படுத்தப்பட்டது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கோவில் சேதப்படுத்தப்பட்டது குறித்து பாகிஸ்தான் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடு முழுவதும் 75 லட்சம் இந்துக்கள் வாழும் நிலையில் அடிக்கடி சிந்துமாகாணத்தில் இருக்கும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்படுவது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.