பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் 800 பேர் இந்தியாவில் குடியுரிமை கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் கடந்த வருடம் பாகிஸ்தான் நாட்டிற்கே திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் மதம் தொடர்பான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால், ராஜஸ்தானில் தஞ்சமடைந்த இந்து மதத்தை சேர்ந்த மக்கள், இந்தியாவில் குடியுரிமை கோரிக்கை நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் நாட்டிலிருந்து வெளியேறி மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
அவ்வாறு அங்கு சென்ற மக்கள், இந்திய அரசு, தங்களை மோசமாக நடத்தியது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இது தொடர்பில் Seemant Lok Sangathan என்னும் அமைப்பின் தலைவரான Hindu Singh Sodha தெரிவித்திருப்பதாவது, கடந்த 2018-ஆம் வருடத்தில் இணையதளத்தின் வழியாக குடியுரிமை விண்ணப்பிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியிருந்தது.
எனினும் பாகிஸ்தானைச் சேர்ந்த கடவுச்சீட்டுக்களை காலாவதியானதாக தெரிவித்து அவர்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, டெல்லியில் அமைந்திருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் கடவுச்சீட்டை புதுப்பிக்க வேண்டிய நிலை உண்டாகிறது. இதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று கூறியிருக்கிறார்.