ஏ பி ஏ டி எஃப் தலைவரான மார்க்கஸ் பிளேயர் பாகிஸ்தான் கிரே பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழுவான எப்.ஏ.டி.எப்-ன் தலைமையிடம் பாரிசில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தீவிரவாதத்திற்கு நிதி வழங்குவது, சட்டவிரோதமான முறையில் பண பரிமாற்றம் செய்வது போன்ற செயல்கள் அதிகமாக நடக்கும் நாடுகளை கண்காணித்து அதனை தடுக்க உத்தரவிடுகிறது.
அந்த உத்தரவு நிறைவேற்றப்படும் வரை உரிய நாடுகளை கிரே என்ற பட்டியலில் இணைத்துவிடும். அந்தவகையில், கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து இந்த பட்டியலில் பாகிஸ்தான் இருக்கிறது. தீவிரவாத இயக்கங்களுக்கு நீதி வழங்குவதை தடுக்க பாகிஸ்தான் அரசுக்கு, இந்த குழுவானது 34 நிபந்தனைகளை விதித்தது.
அதில் 32 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதாக பாகிஸ்தான் அரசு கூறியிருக்கிறது. எனவே, பட்டியலிலிருந்து பாகிஸ்தானை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் எப்.ஏ.டி.எப்-ன் தலைவரான மார்க்கஸ் பிளேயர், கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து நீடிக்கும். பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உறுதிப்படுத்துவோம். அதன் பிறகு தான் பட்டியலிலிருந்து நீக்குவோம் என்று கூறியிருக்கிறார்.