Categories
தேசிய செய்திகள்

”அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி” அச்சத்தில் பாகிஸ்தான் …!!

வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் 20 முறைக்கு மேல் சோதித்துப்பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை எட்டு முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

நிறைவாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மேற்கு வங்க வான்வெளியில் எஸ்யூவி 30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.இதனால் பாகிஸ்தான் கலக்கம் அடைந்துள்ளது.

Categories

Tech |