பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் கஷ்ணவி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .
பாகிஸ்தான் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் கஷ்ணவி ஏவுகணையை பலுசிஸ்தானில் உள்ள சான்மியானி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது . இந்த கஷ்ணவி ஏவுகணை சோதனையை முன்னிட்டு கராச்சி விமான நிலையத்தில் இருந்து மூன்று சர்வதேச மார்கங்களுக்கான வான்வழி சேவை வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது .
மேலும் , காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி உலகநாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது . ஆனால், பாகிஸ்தானின் சோதனையை ஒரு பொருட்டாக கருதவில்லை என இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் , காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் விரும்பும் வகையில் தீர்வு எட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அணு ஆயுத மோதல்கள் ஏற்படும் என்ற தோற்றத்தை உருவாக்கி உலக நாடுகளின் கவனத்தை கவரவும் , காஷ்மீர் பிரச்சனையால் ஆத்திரத்தில் இருக்கும் தீவிரவாதிகளை திருப்தி படுத்தவும் முயற்சித்து வருவதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.