பாகிஸ்தான் அரசு, ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்படுவதாக கூறி டிக் டாக்கை தடை செய்திருந்த நிலையில், தற்போது தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில், டிக் டாக் செயலில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்படுகிறது என்று புகார்கள் எழுந்தது. எனவே, கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தானின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, டிக் டாக் செயலிக்கு தடை அறிவித்தது. இந்நிலையில், டிக் டாக் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததால், அறிவித்த தடையை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில், இதற்கு முன்பு அருவருக்கும் வகையில் வீடியோக்களை பதிவு செய்ததாக புகார்கள் எழுந்தது. எனவே பாகிஸ்தான் அரசு, டிக் டாக் செயலிக்கு தடை அறிவித்தது. அதன்பின்பு டிக் டாக் செயலி 60 லட்சம் வீடியோக்களை நீக்கிவிட்டது. அதன்பின்பு அதன் மீதான தடை நீக்கப்பட்டது.
தற்போது, 4-ஆவது தடவையாக, அந்நாட்டில் டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்படுகிறது. பாகிஸ்தானில் சுமார் 3.9 கோடி பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.