பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனென்றால் பாகிஸ்தான் 400 ரன்கள் குவிக்து, வங்கதேச அணியை 84 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி அதிசயம் நிகழ்ந்தால் தான் வாய்ப்பு. இந்நிலையில் தொடக்க வீரர்களாக பக்கர் சமானும், இமாம் உல்- ஹக்கும் களமிறங்கினர்.
ஆனால் பக்கர் சமான் 13 (31) ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து இறங்கிய பாபர் அசாமும், இமாம் உல்- ஹக்கும் ஜோடி சேந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இந்த ஜோடி பொறுமையாக விளையாடி 140 பந்துகளில் 150 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பாபர் அசாம் 96 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து சதம் அடித்த இமாம் உல்- ஹக் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் ஆட்டமிழப்பால் பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. முகமது ஹபீஸ் 27 ரன்களும், ஹாரிஸ் சோஹைல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சர்பராஸ் அகமது காயம் காரணமாக ரிட்டயர் ஹட் ஆனார்.
அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும் இமாத் வாசிம் அதிரடியாக 26 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது. வங்கதேச அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளும், சைபுதீன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து வங்கதேச அணி களமிறங்கி விளையாடி வருகிறது. பாகிஸ்தான் வங்கதேச அணியை 7 ரன்னில் சுருட்டினால் தான் அரை இறுதி வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கு துளியும் வாய்ப்பு கிடையாது. தற்போது வங்கதேச அணி 31 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 151 ரன்களுடன் விளையாடி வருகிறது.