Categories
உலக செய்திகள்

நிதி கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை…. சர்வதேச நாணய நிதியத்தின் மீது பாகிஸ்தான் அதிருப்தி…!!!

பாகிஸ்தான் அரசு, கடனுதவி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீது அதிர்ப்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அங்கு சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் மேலும் பாதிப்பை சந்தித்தது. எனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்க முடிவெடுத்தது. ஆனால் அந்நாட்டின் வருவாயிலும் செலவுத் திட்டத்திலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு திருப்தி ஏற்படவில்லை.

பாகிஸ்தானிடம் அதிக தகவல்களை கேட்டிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட இறுதி சந்திப்பில் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானின் நிதி அமைச்சராக இருக்கும் முகமது இஷாக் தர் தெரிவித்ததாவது, எங்கள் நாட்டிற்கு கடன் அளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கெஞ்சி கேட்கவில்லை.

சர்வதேச நாணய நிதியம் எப்படி நிதியை நிர்வகிக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகளை எங்களுக்கு ஆணையிட வேண்டாம். நிதி கிடைக்கவில்லை என்றாலும் எங்களால் சமாளிக்க முடியும். நிதி அளிக்கப்படவில்லை என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால் பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகப்படுத்தி அரசாங்கம் மக்களின் மேல் சுமையை வைக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |