பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஸ் ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், “பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஸ் ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் அந்நாட்டின் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷபாஸ் புதிய பிரதமராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.