பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீது வெளிநாடு செல்வதற்கு போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப், மகன் ஹஸ்மா ஷபாஸ், சகோதரர் மற்றும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ் போன்றவர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் போடப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
அந்த விசாரணையின் போது அவர்கள் தப்பிகாதவாறு வெளிநாடுகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் இம்ரான் காணுக்கு எதிராக போடப்பட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். அதேசமயம் பஞ்சாப் மாநிலத்திற்கு முதல்-மந்திரியாக அவரது மகன் ஹஸ்மா ஷபாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கும் பட்டியலை மறுபரிசீலனை செய்ய கடந்த வாரம் மந்திரி சபை கூட்டம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நடத்தப்பட்டு அதில் உள்துறை அமைச்சகத்துக்கு அங்கீகாரத்தை கொடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப், ஹஸ்மா ஷபாஸ் மற்றும் மரியம் நவாஸ் உட்பட 4,863 பேரின் பெயர்கள் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகள் செல்வதற்கு போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.