பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா என்ற மாகாணத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 16-ஆம் தேதி அன்று பிரச்சாரம் நடந்தது. அப்போது பிரதமர் இம்ரான் கான், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. எனவே, பிரதமர் இம்ரான்கான் 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
மேலும், கைபர் பக்துங்வா மாகாணத்தின் முதல்வரான மஹ்மூத் கான், வெளியுறவுத் துறை அமைச்சரான ஷா மெஹ்மூத் குரேஷி உட்பட பாகிஸ்தானின் ஐந்து அமைச்சர்களுக்கு இதே போல அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.