ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்நாட்டுடன் உலக நாடுகள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன், தாங்கள் முன்பு ஆட்சி செய்தது போன்று, தற்போது ஆட்சி நடத்தப் போவதில்லை. பெண்களின் அடிப்படை உரிமைகளை மதிப்போம் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது அவர்களின் செயல்பாடுகள், அதற்கு மாறாக இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் தெரிவித்திருப்பதாவது, தலிபான்கள், தாங்கள் ஆட்சியை சிறப்பாக நடத்த, உலக நாடுகளின் உதவி தங்களுக்கு வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள் எனில், அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அவர்கள் உறுதியுடன் இருப்பது அவசியம்.
தலிபான்கள், அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்களை ஊக்குவிப்பது அவசியம். மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டை கைவிட்டால் அது அழிவுக்கு வழி வகுக்கும். அமைதியை நிலைநாட்ட, உலக நாடுகள் ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியுடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என்று கூறியிருக்கிறார்.